கோப்புப் படம் 
செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

கடந்த மாதம் இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணி   ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாபர் அசாம் கேப்டனாக பாகிஸ்தானை  வழிநடத்தி வந்த நிலையில், தற்போது அணியை ஷான் மசூத் வழிநடத்தவுள்ளார். 

தற்போது, பாட் கம்மின்ஸ் தலைமையிலான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல் டெஸ்ட் டிச.14-18ஆம் தேதிகள் பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி: 

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், லான்ஸ் மோரிஷ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 4வது இடத்தில் உள்ளது. இந்தியா 3வது இடம். பாகிஸ்தான் அணி முதலிடம் வகிக்க வங்கதேசம் நியூசிலாந்தை வீழ்த்தி 2ஆம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT