செய்திகள்

பாட் கம்மின்ஸைப் பார்த்து ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால்...முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை பார்த்து கிரிக்கெட் வீரர் ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்தார்.

DIN

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை பார்த்து கிரிக்கெட் வீரர் ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியை பாட் கம்மின்ஸ் சிறப்பாக வழிநடத்தினார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணி 6-வது முறை கோப்பை வெல்ல வெற்றிகரமாக அணியை வழிநடத்திய கம்மின்ஸுக்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை பார்த்து கிரிக்கெட் வீரர் ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி 6-வது உலகக் கோப்பையை வென்றுள்ளது. பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலுமே ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவர் எப்போதும் சிறந்த கேப்டனாக இருக்கப் போகிறார். அவர் ஆஸ்திரேலிய அணியின் மிகவும் உத்வேகமான வீரர். கிரிக்கெட் குறித்த பொதுவான அறிவு அவருக்கு சிறப்பாக உள்ளது. கிரிக்கெட் வீரர் ஒருவர் கம்மின்ஸைப் பார்த்து உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என்றே அர்த்தம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT