செய்திகள்

ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை நோக்கி ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட்  தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

DIN

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட்  தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இரு அணிகளுக்குமிடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. 

இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை நோக்கி ஜோஸ் பட்லர் முன்னேறவுள்ளார். ஜோஸ்  பட்லர்  ஒருநாள் போட்டிகளில் 4691 ரன்கள் குவித்துள்ளார். 5000 ரன்கள் குவிக்க அவருக்கு 39 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றையப் போட்டியில் அவர் 39  ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 5  ஆயிரம் ரன்களை எடுத்த 5-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் இயான் மோர்கன், ஜோ ரூட், இயான் பெல் மற்றும் பால் காலிங்வுட் ஆகியோர் 5 ரன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT