செய்திகள்

விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷாய் ஹோப்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் அணி வீரர் ஷாய் ஹோப் விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். 

DIN

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் விளையாட உள்ளது. 

நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325/10 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 71 ரன்களும் ஜாக் க்ராவ்லி 48 ரன்களும் சால்ட் 45 ரன்களும் எடுத்தனர். 

அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 48.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார். கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். 

தொடக்க வீரர் அலிக் அதான்ஜா 66 ரன்களும் ரொமாரியோ ஷெபார்ட் 49 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். 

ஆட்ட நாயகன் விருது பெற்றார் ஷாய் ஹோப். மேலும் அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்தப் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT