அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்துள்ளது.
அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று (டிசம்பர் 9) இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மடாண்ட் 44 ரன்கள் குவித்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரியான் பர்ல் 38 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். அயர்லாந்து தரப்பில் மார்க் அடார் 2 விக்கெட்டுகளையும், கிரைக் யங், கேரித் டெலானி மற்றும் கர்டிஸ் கேம்பர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களம் காண்கிறது. ஏற்கனவே, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஜிம்பாப்வே இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.