முகப்பு
செய்திகள்

காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் இருவர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:28 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் இருவர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், காயம் காரணமாக இன்றையப் போட்டி உள்பட இந்தியாவுக்கு எதிராக மீதமுள்ள ஒருநாள் போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஆண்டைல் பெஹ்லுக்வாயோ மற்றும்  ஓட்னியல் பார்ட்மேன் இருவரும் விலகியுள்ளனர். அணியில் பியூரன் ஹென்ரிக்ஸ் இணைந்துள்ளார்.

பெஹ்லுக்வாயோ மற்றும்  ஓட்னியல் பார்ட்மேன் இருவரும் அணியிலிருந்து விலகிய பிறகு தென்னாப்பிரிக்க அணி விவரம்: அய்டன் மார்கரம் (கேப்டன்), நன்ரே பர்கர், டோனி டி ஸார்சி, ரீஸா ஹென்ரிக்ஸ், க்ளாசன், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், வியான் முல்டர், ஷம்சி, ராஸி வாண்டர் துசென், கைல் வெரைன், லிசாத் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ரிக்ஸ். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.