படம்: சமீர் ரிஸ்வி | இன்ஸ்டாகிராம் 
செய்திகள்

இளம் வீரரை ரூ.8.40 கோடிக்கு ஏலமெடுத்த சிஎஸ்கே: யார் இந்த சமீர் ரிஸ்வி?

உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

DIN

துபையில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். 

மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.  

இந்த ஏலத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளம் வீரர் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

யார் இந்த சமீர் ரிஸ்வி?

உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான கிரிக்கெட் வீரர். அதிரடியான பேட்டிங் மற்றும் ஸ்பின் பௌலிங் என ஆல்ரவுண்டருக்கான திறமைசாலி. உ.பி.டி20 லீக்கில் 9 போட்டிகளில் 455 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். மேலும், இந்தத் தொடரிலேயே அதிக சிக்ஸர்கள் (35), அதிவேக சதமடித்த வீரரும் இவர்தான்.

ஆண்களுக்கான 23வயதுக்குட்பட்டோருக்கான மாநில போட்டிகளில் தலைமை வகித்து கோப்பையை வென்றுள்ளார். இந்தத் தொடரில் 7 போட்டிகளில் 454 ரன்களும் அதிக சிக்ஸர் (37) அடித்தும் அசத்தினார்.  

முன்னாள் சிஎஸ்கே வீரர் அபினவ் முகுந்த் இவரை வலது கை சுரேஷ் ரெய்னா எனப் புகழ்ந்துள்ளார். ஏனெனில் இவர் ஸ்பின்னர்கள் மற்றும் வேகப் பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஆடும் விதம் ரெய்னாவை போலிருப்பதாக அபினவ் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT