செய்திகள்

2023 தேசிய விளையாட்டு விருதுகள்: முழு விவரம்

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் விவரங்கள்.

DIN

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் விவரங்கள் இன்று (டிச.20) மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. 

அதில் இந்தாண்டுக்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் ஆர்.வைஷாலி, முகமது ஷமி உள்ளிட்ட 26 வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளன. 

பயிற்சியாளர்கள் ஆர்.பி.ரமேஷ், லலித் குமார், மஹாவீர் பிரசாத், சிவேந்திர சிங் மற்றும் கணேஷ் பிரபாகர் ஆகிய ஐந்து பேருக்கு துரோணாச்சார்யா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மூன்று பயிற்சியாளர்களுக்கும், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை அருகே நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! கல்பாக்கம் அருகே கரையைக் கடக்கும்!

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்... பயணிகள் சிக்கித் தவிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் கனமழை நீடிக்கும்!

அனல் மின்ஊழியா்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை: மின்வாரியம் உத்தரவு!

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT