செய்திகள்

டெஸ்ட் தொடர் வெற்றி உலகக் கோப்பைத் தோல்விக்கு மருந்தாகுமா? ரோஹித் சர்மா பதில்!

கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி சாதிக்கத் தவறியதை சாதிக்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி சாதிக்கத் தவறியதை சாதிக்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை 8 முறை தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில், கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி சாதிக்கத் தவறியதை சாதிக்க விரும்புவதாக  ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு அணியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதே கிடையாது. இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களின் போதும் நாங்கள் தொடரை வெல்வதற்கு மிக அருகில் வந்தோம்.  இந்த முறை கடந்த காலங்களில் இந்திய அணி சாதிக்கத் தவறியதை சாதிக்க விரும்புகிறோம். இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றால் அந்த வெற்றி உலகக் கோப்பையில் ஏற்பட்டத் தோல்விக்கு மருந்தாகுமா எனத் தெரியாது. நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். இது ஒரு பெரிய முடிவு கிடைப்பதற்கான நேரம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT