செய்திகள்

எனது குடும்பத்துக்கு ஒரு வீடு வாங்க வேண்டும்; மனம் திறக்கும் ராஜஸ்தான் அணியின் புதிய வீரர்!

DIN

தனது குடும்பத்துக்காக வீடு ஒன்று வாங்க வேண்டும் என விதர்பாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஷுபம் துபே தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். விதர்பாவைச் சேர்ந்த ஷுபம் துபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.5.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சையது முஸ்டாக் அலி கோப்பையில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ஷுபம் துபே ஐபிஎல் ஏலத்தில் கவனம் பெற்றார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஷுபம் துபே கிரிக்கெட் கிட் வாங்குவதற்கே மிகவும் சிரமப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது குடும்பத்துக்காக வீடு ஒன்று வாங்க வேண்டும் என ஷுபம் துபே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷுபம் துபே பேசியதாவது: எனது குடும்பத்தினரால் எனக்கு ஒரு கிரிக்கெட் கிட்  கூட வாங்கிக் கொடுக்க முடியாத சூழல். எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கித் தரவேண்டுமென என் தந்தை முயற்சி செய்தும் அவரால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலைகள் சரியில்லாதபோதிலும் அவர்கள் என்னை கிரிக்கெட் விளையாடக் கூடாது என ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது.

என் தந்தை சிறிய வேலைகள் செய்து குடும்பத்துக்கு வருமானம் ஈட்டுகிறார். எனது சகோதரன் குடும்பத்தின் தேவைகளை கவனித்துக் கொள்கிறான். எனக்கு காயங்கள் ஏற்படும்போது, எனது குடும்ப உறுப்பினர்கள் நேர்மறையான சிந்தனையோடு முன்னேறிச் செல்லுமாறு கூறுவார்கள். அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தர விரும்புகிறேன். முதலில் எனது குடும்பத்துக்காக ஒரு வீடு வாங்க ஆசைப்படுகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையில் புழுதிப் புயல்: விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT