செய்திகள்

பாலியல் வன்கொடுமை: பிரபல நேபாள வீரருக்கு தண்டனை உறுதி!

DIN

நேபாளம் நாட்டின் சுழல்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சானே. 2018இல் ஐபிஎல் போட்டியில் தேர்வான முதல் நேபாளம் கிரிக்கெட் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தில்லி அணிக்கு தேர்வான லாமிச்சானே சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

ஐபிஎல் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல், பாகிஸ்தானின் பிஎஸ்எல் ஆகிய தொடர்களிலும் பங்கேற்று சிறப்பான பங்களிப்பினை செய்துள்ளார். 

கடந்தாண்டு ஆகஸ்டில் 17வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது சந்தீப் லாமிச்சானே மீது வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்குப் பிறகு கடந்தாண்டு நவம்பர் 4-ஆம் தேதி காத்மாண்டு நீதிமன்றம் லாமிச்சானேவுக்கு சிறை தண்டனை வழங்கியது. 

பின்னர் இந்தாண்டின் துவக்கத்தில் ஜனவரி 12இல் 2 இலட்சம் ரூபாய்க்கு பிராமண பத்திரம் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார் லாமிச்சானே. பின்னர் நேபாள் நாட்டுக்காக விளையாடியும் வருகிறார். 

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் சந்தீப் லாமிச்சானேவுக்கு தண்டனையை உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டனை விவரம் குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை மூத்த தேசிய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கப்படுமென தகவலகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT