செய்திகள்

ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியது: பாகிஸ்தான் இயக்குநர்

ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் இயக்குநர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் இயக்குநர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றியைப் பதிவு செய்ததுடன், தொடரையும் கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் அபார பந்துவீச்சினால் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் இயக்குநர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு அணியாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். ஆஸ்திரேலியாவை எதிர்த்து  பாகிஸ்தான் அச்சமின்றி விளையாடியது. பேட்டிங்கில் பாகிஸ்தான் முதல் போட்டியைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் சில தவறுகளை செய்ததால் போட்டியில் தோல்வியைத் தழுவினோம். இருப்பினும், இந்தப் போட்டியிலிருந்து பாகிஸ்தானுக்கு பல நேர்மறையான விஷயங்கள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

சிவ (நவ) தாண்டவம்

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

வேலைவாய்ப்பு அருளும் வேணுகோபாலன்

குறை தீர்க்கும் குமரன்

SCROLL FOR NEXT