செய்திகள்

ஆஸி. முதல் டெஸ்ட்: இந்திய பேட்டர் விலகல்!

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார்...

DIN

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஷ்ரேயஸ் ஐயர், காயம் காரணமாக நாகபுரியில் நடைபெறவுள்ள முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். 

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஷ்ரேயஸ் ஐயர். தற்போது ஆஸி. அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்ற பிறகே அவரால் இந்திய அணியினருடன் மீண்டும் இணைய முடியும். பிப்ரவரி 17 முதல் தில்லியில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷ்ரேயஸ் ஐயர் விளையாடாத நிலையில் சூர்யகுமார் யாதவ் அல்லது ஷுப்மன் கில் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய டெஸ்ட் அணியின் நடுவரிசையில் இடம்பெற வாய்ப்புண்டு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT