செய்திகள்

டி20 தரவரிசை: உலக சாதனையை நெருங்கும் சூர்யகுமார் யாதவ்!

தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

DIN

ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார் சூர்யகுமார் யாதவ். இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார். ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதற்கு முன்பு டேவிட் மலான், ஆரோன் ஃபிஞ்ச் ஆகிய இருவரும் மட்டுமே 900 புள்ளிகளை அடைந்துள்ளார்கள். இந்திய வீரர்களில் கோலி அதிகபட்சமாக 897 மற்றும் ராகுல் 854 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் 47 ரன்கள் எடுத்தார். இதனால் 908 புள்ளிகள் பெற்றுள்ளார். இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் அதிகப் புள்ளிகளைப் பெற்றவர், இங்கிலாந்தின் மலான். அவர் எடுத்த 915 புள்ளிகளை சூர்யகுமார் விரைவில் நெருங்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

SCROLL FOR NEXT