செய்திகள்

எஸ்ஏ20 போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற பவுமா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன்...

DIN

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமாவுக்கு எஸ்ஏ20 லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற எஸ்ஏ20 ஏலத்தில் பவுமாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. தென்னாப்பிரிக்க வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாக இருந்தும் ஏலத்தில் யாரும் தன்னைச் சீந்தாததால் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தற்போது, அவர் என்ன நினைத்தோரோ அது நடந்துள்ளது. 

சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் ஒரு சதம் உள்பட 180 ரன்கள் எடுத்தார். 23 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடித்தார். ஸ்டிரைக் ரேட் - 114.64. ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். 

இதையடுத்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, டாம் அபெலுக்குப் பதிலாக பவுமாவைத் தேர்வு செய்துள்ளது. 

ஜனவரி 10 அன்று தொடங்கிய எஸ்ஏ20 போட்டி, பிப்ரவரி 11 அன்று நிறைவுபெறுகிறது. 8 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்று 17 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT