செய்திகள்

சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகள்: கும்ப்ளே சாதனையைச் சமன் செய்த அஸ்வின்!

சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். 

DIN

சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவில் 25 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இதன்மூலம் இதே இலக்கைத் தொட்ட கும்ப்ளேவின் சாதனையைச் சமன் செய்துள்ளார். கும்ப்ளே 115 இன்னிங்ஸிலும் அஸ்வின் 101 இன்னிங்ஸிலும் நிகழ்த்தியுள்ளார்கள். சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் - முரளிதரன் (45), ஹெராத் (26). 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT