செய்திகள்

காதலர் தின புகைப்படத்தை வெளியிட்டாரா?: பிருத்வி ஷா மறுப்பு

காதலர் தினமான இன்று, நடிகை நிதி ரவியுடன் இருக்கும் புகைப்படத்தை பிருத்வி ஷா வெளியிட்டு...

DIN

காதலர் தினத்தன்று தான் வெளியிட்டதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் தவறானது எனப் பிரபல கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா கூறியுள்ளார். 

23 வயது பிருத்வி ஷா, இந்திய அணிக்காக 2018 முதல் 5 டெஸ்டுகள், 1 டி20, 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக ஜூலை 2021-ல் விளையாடினார். இந்திய அணியிலிருந்து என்னை அழைப்பார்கள் என எண்ணவில்லை என்று ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் முச்சதம் அடித்த பிறகு பிருத்வி ஷா கூறினார். பிறகு, சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்வானார். 

இந்நிலையில் காதலர் தினமான இன்று, நடிகை நிதி ரவியுடன் இருக்கும் புகைப்படத்தை பிருத்வி ஷா வெளியிட்டு, என் மனைவிக்குக் காதல் தின வாழ்த்துகள் என்று குறிப்பிட்டதாகவும் பிறகு அதை நீக்கிவிட்டதாகவும் தெரிகிறது. அந்தப் பதிவில் நடிகை நிதி ரவி டேக் செய்யப்பட்டிருந்தார். பிருத்வி ஷாவும் நடிகை நிதி ரவியும் உதடு குவித்து அருகருகே அமர்ந்திருந்த படம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது. எனினும் தன்னைப் பற்றி வெளியான செய்திக்குத் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார் பிருத்வி ஷா.

யாரோ என்னுடைய புகைப்படத்தை எடிட் செய்து நான் என்னுடைய இன்ஸ்டகிராமில் வெளியிடாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அந்தப் பதிவையும் அது டேக் செய்ததையும் தவிர்த்து விடுங்கள். நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT