முகப்பு
செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: சதத்தால் முன்னேறிய ரோஹித் சர்மா!

தரவரிசையில் 8-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.

செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: சதத்தால் முன்னேறிய ரோஹித் சர்மா!

தரவரிசையில் 8-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

பேட்டர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் 8-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா, நாகபுரி டெஸ்டில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இதையடுத்து டெஸ்ட் பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் 8-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோஹித் சர்மா. ஆனால் முதல் டெஸ்டில் சரியாக விளையாடாத வார்னர், தரவரிசையில் 20-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். 84 ரன்கள் அடித்த அக்‌ஷர் படேல், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →