செய்திகள்

ஐபிஎல் 2023: முதல் ஆட்டத்தில் மோதும் சிஎஸ்கே - குஜராத் அணிகள்!

ஐபிஎல் 2023 போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதவுள்ளன. 

DIN

ஐபிஎல் 2023 போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதவுள்ளன. 

ஐபிஎல் 2022 போட்டியை பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வென்றது. இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது.

ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

சென்னை, ஆமதாபாத், மொஹலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

ஏப்ரல் 3 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. 

இதனால்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடவுள்ளது. சென்னையில் கடைசியாக விளையாடி ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன் என தோனியும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணிலும் இதர நகரங்களிலும் விளையாடும் முறை இந்த ஆண்டு முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி 10 அணிகளும் பாதி ஆட்டங்களை சொந்த மண்ணிலும் (சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடுவது போல) மீதி பாதி ஆட்டங்களை இதர நகரங்களிலும் விளையாடுகின்றன. 

ஐபிஎல் 2023 போட்டியை இணையத்தில் இலவசமாக ஒளிபரப்பவுள்ளதாக ஜியோ நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு முதல் இம்பாக்ட் வீரர் என்கிற மாற்று வீரருக்கு வாய்ப்பளிக்கும் புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT