செய்திகள்

எனக்கும் கே.எல். ராகுலுக்கும் தனிப்பட்ட விரோதமா?: வெங்கடேஷ் பிரசாத் விளக்கம்

கே.எல். ராகுல் மீதான தனது விமர்சனங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்.

DIN


கே.எல். ராகுல் மீதான தனது விமர்சனங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்.

ஒரு வருடத்துக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் அரை சதமும் எடுத்தார் கே.எல். ராகுல். அத்தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் எடுத்தவர் அவர்தான். (1-2 எனத் தொடரில் தோற்றது இந்தியா.) அடுத்து விளையாடிய சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் ராகுல் சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் மோசமாகவே விளையாடியுள்ளார். கடைசி 10 இன்னிங்ஸில் ஒருமுறையும் 25 ரன்களைக் கூட அவர் தாண்டவிலை. இதனால் கே.எல். ராகுலை இந்திய அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ட்விட்டரில் ராகுலைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய விமர்சனங்களுக்கு அவர் விளக்கம் அளித்ததாவது:

கே.எல். ராகுலுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதமா எனச் சிலர் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்எதிர். அவர் நன்றாக விளையாட வேண்டும் என்றே விரும்புகிறேன். தற்போதைய நிலையில் அவரைத் தொடர்ந்து விளையாட வைப்பது அவருடைய தன்னம்பிக்கையை உயர்த்தாது. இப்போது உள்ளூர் போட்டிகள் முடிவடைந்து விட்டதால், மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட, அவர் இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அங்கு ரன்கள் எடுத்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும். அணியிலிருந்து நீக்கப்பட்டபோது புஜாரா அப்படித்தான் செய்தார். அணிக்கு மீண்டும் வருவதற்கான வேலைகளில் ஈடுபட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வருவதுதான் சிறந்த பதிலடியாக இருக்கும். ஆனால் ஐபிஎல் போட்டியிலிருந்து ராகுல் விலகுவது சாத்தியமா என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT