செய்திகள்

ஷர்துல் தாக்குருக்கு இப்போதுதான் திருமணம் ஆகியிருக்கிறது...: ரோஹித் சர்மா

DIN

இந்திய அணி 3-வது டெஸ்டை வென்றால் ஆமதாபாத் டெஸ்டில் வீரர்கள் தேர்வில் மாற்றம் ஏற்படும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் நாளை (மார்ச் 1) தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

3-வது டெஸ்டை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதியடைந்து விட்டால் 4-வது டெஸ்டில் அணியில் மாற்றம் செய்து இறுதிச்சுற்றுக்கான பயிற்சியாக மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என ரோஹித் சர்மா இன்று தெரிவித்துள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பற்றி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தயாராவது பற்றி ஏற்கெனவே நாங்கள் பேசியுள்ளோம். அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முக்கியமான ஒரு வீரர், ஷர்துல் தாக்குர். எங்களுடைய திட்டங்களில் அவர் உள்ளார். அவருக்குத் தற்போதுதான் திருமணமாகியுள்ளது. எனவே 4-வது டெஸ்டுக்கு எந்தளவுக்குத் தயாராக உள்ளார் எனத் தெரியவில்லை. சமீபத்தில் அவர் எத்தனை ஓவர்கள் வீசினார் எனத் தெரியாது. ஆனால் அதற்கான திட்டங்களில் நாங்கள் உள்ளோம். எங்களுக்கான முடிவு இந்தூர் டெஸ்டில் கிடைத்துவிட்டால் ஆமதாபாத் டெஸ்டில் புதிதாக முயற்சி செய்வோம். இங்கிலாந்து ஆடுகளம் இரு அணிகளுக்கும் வித்தியாசமாக இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி நான் பேச விரும்பவில்லை. இன்னும் நாங்கள் தகுதியடையவில்லை. இந்தூர் டெஸ்டை வென்ற பிறகு அதைப் பற்றி பேசலாம். அதுதான் சரியானதாக இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT