ஷிவம் மாவி (நடுவில்) 
செய்திகள்

இந்திய அணிக்குத் தேர்வான செய்தி கேட்டவுடன்...: இளம் வீரர் நெகிழ்ச்சி!

இந்திய அணிக்குத் தேர்வான செய்தி கேட்டவுடன் எல்லாமே அசைவற்றதாக ஆனதாக வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி கூறியுள்ளார்.

DIN

இந்திய அணிக்குத் தேர்வான செய்தி கேட்டவுடன் எல்லாமே அசைவற்றதாக ஆனதாக வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி கூறியுள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 18 அன்றும் டி20 தொடர் ஜனவரி 27 அன்றும் தொடங்குகின்றன. 

இலங்கைக்கு எதிரான டி20 தொடர், நாளை முதல் தொடங்குகிறது. பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணிக்கு 24 வயது வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி தேர்வாகியுள்ளார். அதற்கு முன்பு ஐபிஎல் ஏலத்தில் ரூ. 6 கோடிக்கு குஜராத் அணி தேர்வு செய்தது. இந்திய அணிக்குத் தேர்வானது பற்றி க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு ஷிவம் மாவி பேட்டியளித்ததாவது:

உள்ளூர் கிரிக்கெட்டில் நாங்கள் விளையாடும்போது ஓய்வுக்காகச் சீக்கிரம் படுக்கச் செல்வோம். அன்றைய தினம், இந்திய அணி அறிவிக்கப்படுவதால் சுழற்பந்து வீச்சாளர் செளரப் குமாரின் அறையில் சமரத் சிங்குடன் இருந்தேன். இந்திய அணிக்கு என்னைத் தேர்வு செய்ததை அறிந்தவுடன் சில நொடிகள் எல்லாமே அசைவற்றதாக ஆகிவிட்டது. அருமையான உணர்வு அது. எனக்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்தேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT