செய்திகள்

இலங்கை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! 

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்களை எடுத்தது. 

DIN

ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கும் இந்த ஆண்டில், இந்திய அணியின் அட்டவணையில் டி20 தொடர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. என்றாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முழுமையான அணியைத் தேர்வு செய்ய இந்தத் தொடர்கள் முக்கியத்தும் பெறுகின்றன. 

இந்தியா - இலங்கை மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது. 

இலங்கை அணி டாஸ் வென்று பந்து விச்சினை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா. இந்திய அணியில் சுப்மன் கில், ஷிவம் மாவி முதன்முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர். மேலும் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது. சிஎஸ்கே வீரர் ருதுராஜ் இடமில்லை. 

தீபக் ஹூடா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 37 ரன்களும், ஹார்திக் பாண்டியா 29 ரன்களும் அக்‌ஷர் படேல் 31 ரன்களும் எடுத்தனர். சுப்மன் கில் 7 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களும், சஞ்சு சாம்சன் 5 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில்  தில்ஷன் மதுஷனகா, மகேஷ் தீக்‌ஷனா, சமிகா கருணாரத்னே, தனஞ்செய டி செல்வா, வனிந்து ஹசரங்கா தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். 

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT