செய்திகள்

இலங்கை ஒருநாள் தொடர்: இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

29 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் டி20 உலகக் கோப்பை உள்பட பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார்.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்துள்ளார். இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக 10, 12, 15 தேதிகளில் ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், சஹால், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், பும்ரா, ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தல்: பாமக சார்பில் போட்டியிட டிச. 14 முதல் விருப்பமனு! - அன்புமணி

பயணிகள் ஏற்றுவதில் தகராறு! ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் வாக்குவாதத்தால் போக்குவரத்து பாதிப்பு!

இரவு நேர தூய்மைப் பணி! அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

தேர்தல் வேட்பாளர் நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு முன்னேறிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT