செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் புத்தாண்டுச் சபதம்: ஹார்திக் பாண்டியா

ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே இந்திய அணியின் புத்தாண்டுச் சபதம் என்று இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார்

DIN

ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே இந்திய அணியின் புத்தாண்டுச் சபதம் என்று இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது இந்திய அணி. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் டி20 ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய டி20 அணியின் கேப்டனான ஹார்திக் பாண்டியா கூறியதாவது:

இந்திய அணியின் புத்தாண்டுச் சபதமே, இந்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதுதான். இதைவிடவும் ஒரு பெரிய சபதம் இருக்க முடியாது. இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். எங்கள் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நம்பிக்கையுடன் காத்திருப்போம். 
2022 டி20 உலகக் கோப்பையை வெல்ல மிகவும் முயன்றோம். ஆனால் அது நடக்கவில்லை. இன்னும் சாதிக்க நிறைய உள்ளது. நான் இன்னும் எதுவுமே சாதிக்கவில்லை. ஒரே லட்சியம், உலகக் கோப்பையை வெல்வதுதான். என்னுடைய கடுமையான உழைப்பினால் தான் இந்த இடத்தை அடைந்துள்ளேன். கடின உழைப்பினால் என் எண்ணங்களை நிறைவேற்றுவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT