சர்ஃபராஸ் கான் (கோப்புப் படம்) 
செய்திகள்

தமிழக அணியை வெறுப்பேற்றி 481 ரன்கள் குவித்த மும்பை அணி!

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் குவித்துள்ளது. 

DIN


தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் குவித்துள்ளது. 

மும்பையில் மும்பை - தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

தமிழக அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. சாய் சுதர்சன், சாய் கிஷோர் டக் அவுட் ஆனார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கடந்த ஆட்டத்தில் சதமடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் மட்டும் பொறுப்பாக விளையாடி அரை சதமெடுத்தார். தமிழக அணி 36.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரதோஷ் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளையும் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். முதல் நாள் முடிவில் மும்பை அணி 41 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று சிறப்பாக பேட்டிங் செய்தது மும்பை அணி. சர்ஃபராஸ் கான் சதமடித்து தனது அணி அதிக ரன்கள் முன்னிலை பெற உதவினார். முதல் தர கிரிக்கெட்டில் இது அவருடைய 12-வது சதம். 

சர்ஃபராஸ் கான் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தனுஷ் 71 ரன்களும் மோஹித் 69 ரன்களும் எடுத்தார்கள். கடைசி விக்கெட்டுக்கு மோஹித்தும் சித்தார்த்தும் 92 ரன்கள் எடுத்தார்கள். மும்பை அணி, 106.4 ஓவர்களில் 481 ரன்கள் எடுத்தது. தமிழக அணியின் திரிலோக் நாக், அஸ்வின் கிறிஸ்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள மும்பை அணி, இந்த ஆட்டத்தை வெல்லும் நிலைமையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT