செய்திகள்

கோலி மீண்டும் சதம்: 373 ரன்கள் குவித்த இந்திய அணி!

DIN

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. விராட் கோலி தனது 45-வது ஒருநாள் சதத்தை எடுத்தார். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் குவாஹட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தீக்‌ஷனாவுக்குப் பதிலாக துனித் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். வங்கதேசத்தில் இரட்டைச் சதமெடுத்த இஷான் கிஷன், டி20 கிரிக்கெட்டில் அசத்தி வரும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் இடமில்லை. சுழற்பந்து வீச்சாளர்களாக சஹாலும் அக்‌ஷர் படேலும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

ஆரம்பம் முதல் ரன்களை விரைவாக எடுத்தார்கள் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும். 10 ஓவர்களில் இந்திய அணி 75 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்திருந்தார். பிறகு 41 பந்துகளில் ரோஹித் சர்மாவும் 51 பந்துகளில் ஷுப்மன் கில்லும் அரை சதங்களை எடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 143 ரன்கள் சேர்த்த நிலையில் ஷனகா பந்தில் ஆட்டமிழந்தார் ஷுப்மன் கில். அவர் 60 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 67 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களிலும் கே.எல். ராகுல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதன்பிறகு பாண்டியாவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆரம்பத்திலிருந்து வேகமாக ரன்கள் எடுத்த விராட் கோலி 47 பந்துகளில் அரை சதமெடுத்தார். இதன்பிறகு 80 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது அவருடைய 45-வது ஒருநாள் சதம். வங்கதேசத்தில் கடைசியாக விளையாடிய ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்த விராட் கோலி இன்று இலங்கைக்கு எதிராகவும் சதமடித்துள்ளார். இதனால் அடுத்தடுத்த ஆட்டங்களில் சதமடித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர்களில் கோலி 2-வது இடத்தில் உள்ளார் கோலி. சச்சின் 49 சதங்களும் கோலி 45 சதங்களும் எடுத்துள்ளார்கள். இலங்கைக்கு எதிராக 9-வது சதம் இது. 49-வது ஓவரில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கோலி. 

இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இலங்கையின் ரஜிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT