செய்திகள்

சுப்மன் கில் சதம்: வலுவான நிலையில் இந்தியா!

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வலுவாக விளையாட வருகிறது.

DIN

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. ஒருநாள் போட்டியில் ஏற்கனவே 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உம்ரான் மாலிக், ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். 

கேப்டன் ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2019இல் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 19 போட்டிகளில் விளையாடி இதுவரை ஒரு சதம் அடித்திருந்தார். இந்நிலையில் தனது 2வது சதத்தினை நிறைவு செய்துள்ளார்.

89 பந்துகளில் சதமடித்து அசத்தினார் கில். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்து விளையடை வருகிறார். 48 பந்துகளில் விராட் 50 அடித்தார். இந்திய அணி 33 ஓவர் முடிவில் 224 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து வலுவான நிலையில் உள்ளது. விராட்- 57*, சுப்மன் கில்- 115*.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT