முகப்பு
செய்திகள்

தெறிக்க விட்ட விராட் கோலி: இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 390 ரன்களை எடுத்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. ஒருநாள் போட்டியில் ஏற்கனவே 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உம்ரான் மாலிக், ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சுப்மன் கில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 85 பந்துகளில் சதத்தினை நிறைவு செய்தார். கே.எல்.ராகுல் 7 ரன்களும், ஸ்ரேயஷ் ஐயர் 38 ரன்களும், சூர்யகுமார் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 166* ரன்களை அடித்து அசத்தினார். இதில் 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும்.

இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா, லஹிரு குமார தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →