செய்திகள்

டாடா ஸ்டீல் செஸ்: உலகின் நெ.2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலகின் நெ.2 வீரர் டிங் லிரனை வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.

DIN

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலகின் நெ.2 வீரர் டிங் லிரனை வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.

இதற்கு முன்பு விளையாடிய மூன்று ஆட்டங்களையும் டிரா செய்திருந்தார் பிரக்ஞானந்தா. நான்காவது சுற்றில் டிங் லிரனை எதிர்கொண்டார். லைவ் தரவரிசையில் கார்ல்சனுக்கு அடுத்து 2800 புள்ளிகளைக் கொண்ட மற்றொரு வீரர் லிரன். இந்நிலையில் லிரனுக்கு எதிரான 4-வது சுற்றில் 73 நகர்த்தல்களின் முடிவில் உலகின் நெ.2 வீரரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.  

மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் கார்ல்சனை அனிஷ் கிரி தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்தார். இதற்கு முன்பு கிளாசிகல் பிரிவில் 2011-ல் 16 வயதில் கார்ல்சனை வீழ்த்தினார் கிரி. 12 வருடங்கள் கழித்து கிளாசில் செஸ் போட்டியில் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தியுள்ளார். இதுவரை டாடா ஸ்டீல் செஸ் போட்டியை கிரி வென்றதில்லை. 

நான்காவது சுற்றின் முடிவில் 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 4-வது இடத்திலும் 2 புள்ளிகளுடன் கார்ல்சன் 7-வது இடத்திலும் உள்ளார்கள். வியாழன் அன்று நடைபெறும் 5-வது சுற்றில் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. ஜனவரி 28 அன்று நடைபெறும் 12-வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனுடன் மோதுகிறார். இப்போட்டி ஜனவரி 29 அன்று நிறைவுபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT