செய்திகள்

ரிஷப் பந்த் குறித்து மனம் திறந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்!

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் மீதான அன்பு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் மனம் திறந்துள்ளார்.

DIN

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் மீதான அன்பு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் மனம் திறந்துள்ளார்.

அண்மையில், கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எலும்பு முறிவுகள் ஏதும் இல்லாத போதிலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கடினம் எனவே கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடுவது கடினம் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிஷப் பந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அதில் அவர் ரிஷப் பந்த் குறித்து கூறியதாவது: ரிஷப் பந்த் எனக்கு மிகவும் பிடித்த நபர். கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் அவருடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். கடந்த இரண்டு நாட்களாக அவருடன் நான் பேசும்போது, இந்த காலக் கட்டம் அனைவருக்கும் மிகவும் கடினமானது என்றேன். நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்வோம். அவர் ஐபிஎல் போட்டிகளின்போது எனது அருகில் இருந்தால் போதும். விரைவில் அவர் மைதானத்தில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT