செய்திகள்

ஒல்லியான வீரர்களுக்கு ஃபேஷன் ஷோ செல்லுங்கள்: சர்ஃபராஸ் கானுக்காகக் குரல் கொடுக்கும் கவாஸ்கர்

DIN

மும்பை வீரர் சர்ஃபராஸ் கானைத் தேர்வு செய்யாத பிசிசிஐ தேர்வுக்குழுவினருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரரான கவாஸ்கர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கான் இடம்பெறவில்லை. இதையடுத்து தனது வருத்தத்தை ஊடகங்களில் அவர் பதிவு செய்தார். தில்லியில் நடைபெறும் மும்பை - தில்லி அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மற்றொரு சதமடித்தார் சர்ஃபராஸ் கான். 

இந்நிலையில் சர்ஃபராஸ் கானைத் தேர்வு செய்யாத தேர்வுக்குழுவினரை விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் வீரரான கவாஸ்கர். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

சதமடித்து விட்டு அவர் களத்துக்கு வெளியே ஓய்வெடுப்பதில்லை. தொடர்ந்து ஃபீல்டிங் செய்கிறார். இதனால் கிரிக்கெட் விளையாடுவதற்கான உடற்தகுதியைக் கொண்டுள்ளார் என்று அர்த்தம். உங்களுக்கு ஒல்லியான வீரர்கள் தான் வேண்டுமென்றால் ஃபேஷன் ஷோவுக்குச் சென்று மாடல்களைத் தேர்வு செய்யலாம். அவர்கள் கையில் பேட்டையும் பந்தையும் கொடுத்து அணியில் சேர்த்துக்கொள்ளலாம். கிரிக்கெட் வீரர்கள் எல்லாவிதமான உருவங்களிலும் இருப்பார்கள். உருவத்தைக் கொண்டு ஒரு வீரரைத் தேர்வு செய்யாதீர்கள். எடுத்த ரன்கள், விக்கெட்டுகளைக் கவனியுங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

புதிய விதிகளை அமல்படுத்த அவகாசம் கோரிய இண்டிகோ!

மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா? .…... அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

ரவிக்கையின் சமூக மதிப்பென்ன? அங்கம்மாள் - திரை விமர்சனம்!

திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக நோட்டீஸ்!

SCROLL FOR NEXT