செய்திகள்

நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: ரோஹித் சர்மா

தான் பேட்டிங் செய்யும் விதம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

தான் பேட்டிங் செய்யும் விதம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் பேட்டிங் செய்யும் விதம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது: நான் என்னுடைய ஆட்டத்தை சிறிது மாற்ற விரும்புகிறேன். நான் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு அதிக அளவில் ரன்கள் குவித்து அவர்களது மீது ஆட்டத்தின் அழுத்தத்தை திருப்ப வேண்டும். அது தான் முக்கியம். நான் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை என எனக்குத் தெரியும். ஆனால், அது குறித்து நான் அதிகமாக கவலைப்படுவதில்லை. நான் என்னுடைய பேட்டிங் செய்யும் விதம் குறித்து மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். நான் அனைத்துப் போட்டிகளிலும் ஒரே மாதிரியான பேட்டிங் திறனையே வெளிப்படுத்துகிறேன். நான் விளையாடும் விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய அளவில் ரன்கள் விரைவில் வரும் என்றார்.
 
இன்றையப் போட்டியில் ரோஹித் சர்மா 50 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

மூன்று முறை இரட்டைச் சதம் அடித்தவர் என்ற பெருமைக்குரிய ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் கடந்த 2020 ஆண்டு ஜனவரிக்குப் பிறகு சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT