செய்திகள்

உலகக்கோப்பை ஹாக்கி: வெளியேறியது இந்திய அணி

உலகக் கோப்பை ஹாக்கியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனால்ட்டி முறையில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

DIN

உலகக் கோப்பை ஹாக்கியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனால்ட்டி முறையில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரம், ரூா்கேலாவில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிந்த நிலையில், இங்கிலாந்து, நெதா்லாந்து உள்பட 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. 

இந்நிலையில், மீதமுள்ள நான்கு காலிறுதி இடங்களுக்கு குரூப் பிரிவுகளில் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்ற அணிகள் மோதுகின்றன. அதன்படி, கிராஸ்ஓவா் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இந்தியா இன்று மோதியது. இதில் கட்டாயம் வென்றால் தான் காலிறுதிக்கு முன்னேற முடியும் என்கிற நிலையில் இந்தியா களமிறங்கியது. 

எனவே இன்றைய ஆட்டத்தில் அனல் பறந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல் அடித்திருந்திருந்தன. இதனால் ஆட்டத்தில் பெனால்ட்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் 5-4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT