செய்திகள்

நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தி நெ.1 அணி ஆகுமா இந்தியா?

முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

DIN


சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் ஆட்டம், இந்தூரில் நாளை நடைபெறவுள்ளது.

டி20 தரவரிசையில் முதலிடத்திலும் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திலும் இந்திய அணி உள்ளது. ஒருநாள் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. எனினும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிடும். அது நடந்துவிட்டால் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் 2 இடங்களில் உள்ள ஒரே அணி என்கிற பெருமையை இந்திய அணி அடையும்.

2-வது ஒருநாள் ஆட்டத்தில் அடைந்த தோல்வியால் ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. இங்கிலாந்துக்கு முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.  

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் இந்திய அணி வென்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

பாஜகவுடன் நேரடிக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும்... யாரைச் சொல்கிறார் விஜய்?

SCROLL FOR NEXT