ஷஃபாலி வர்மா (கோப்புப் படம்) 
செய்திகள்

மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்திய இந்தியா

இலங்கைக்கு எதிரான மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

DIN

இலங்கைக்கு எதிரான மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3-வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது இந்திய யு-19 மகளிர் அணி. முதலில் பேட்டிங் இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் மட்டும் எடுத்தது. பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 7.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து பெரிய வெற்றியை அடைந்தது. ஷஃபாலி 15 ரன்களுக்கும் ரிச்சா கோஷ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகமதாபாத்தில் வங்கி மோசடி: 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

ஆபத்தை ஏற்படுத்தும் க்ரீம்கள்! சருமப் பராமரிப்புக்கு இந்த 3 மட்டுமே போதும்!

வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து! உடனே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT