செய்திகள்

ஹாரிஸ் ராஃப் போல உம்ரான் மாலிக் இல்லை: பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்

ஹாரிஸ் ராஃப் போல உம்ரான் மாலிக் பயிற்சிகளைப் பெற்றவருமல்ல, உடற்தகுதியைக் கொண்டவருமல்ல.

DIN

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் உடன் ஒப்பிட்டு இந்திய வேகப்ப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை விமர்சனம் செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்யூப் ஜாவத்.

23 வயது உம்ரான் மாலிக் இந்திய அணிக்காக 7 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இவரும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப்பும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி கவனம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் இருவரையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்யூப் ஜாவத் கூறியதாவது:

ஹாரிஸ் ராஃப் போல உம்ரான் மாலிக் பயிற்சிகளைப் பெற்றவருமல்ல, உடற்தகுதியைக் கொண்டவருமல்ல. ஒருநாள் கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சைக் கவனித்தால், ஆரம்பத்தில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் உம்ரான் மாலிக், பிறகு மணிக்கு 138 கி.மீ என வேகத்தைக் குறைத்து பந்துவீசுகிறார். கோலிக்கும் இதர பேட்டர்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் அது. உணவுக் கட்டுப்பாடு, பயிற்சி, வாழ்க்கைமுறை என அனைத்திலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் ஹாரிஸ் ராஃப். இவரைப் போல உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் இன்னொரு பாகிஸ்தான் பந்துவீச்சாளரை நான் பார்த்ததில்லை. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பந்துவீசுவது கூட பெரிய விஷயமில்லை. ஆனால் ஒரே வேகத்தில் ஆட்டம் முழுக்கப் பந்துவீசுவது முக்கியம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

SCROLL FOR NEXT