செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சானியா - போபண்ணா ஜோடி!

தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீராங்கனை சானியா மிர்சா...

DIN

தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீராங்கனை சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடி வருகிறார். காலிறுதிச்சுற்றில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி, லட்வியா - ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஜோடியுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்திலிருந்து அவர்கள் விலகியதால் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி சிரமம் இன்றி அரையிறுதிக்கு முன்னேறியது. 

இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி, அமெரிக்க, இங்கிலாந்து ஜோடியான டிசிரே - ஸ்குப்ஸ்கியை 7-6(5), 6-7(5), 10-6 எனக் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு வீழ்த்தியது. இதனால் இந்தியர்கள் இருவரும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்கள். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்று ஆட்டம் 5 வருடங்களுக்குப் பிறகு இந்தியரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. 2018-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா பங்கேற்றார். 

பிப்ரவரி மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா சமீபத்தில் அறிவித்தார். ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார். அடுத்த மாதம் பிப்ரவரி 19 முதல் நடைபெறவுள்ள துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவிட்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

SCROLL FOR NEXT