செய்திகள்

2022-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர்: ஐசிசி அறிவிப்பு

2022-ல் 31 ஆட்டங்களில் விளையாடி 2 சதங்களுடன் 1164 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 187.43...

DIN

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தேர்வாகியிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

32 வயது சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 20 ஒருநாள், 45 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 45 டி20 ஆட்டங்களில் 3 சதங்களுடன் 1578 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 180.34. இதுவரை 92 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

2022-ல் 31 ஆட்டங்களில் விளையாடி 2 சதங்களுடன் 1164 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 187.43. அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 6 இன்னிங்ஸில் 3 அரை சதங்கள் எடுத்தார். 

ஐசிசி டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார். 

இந்நிலையில் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக சூர்யகுமார் யாதவை அறிவித்துள்ளது ஐசிசி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT