செய்திகள்

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 313 ரன்கள் முன்னிலை!

DIN

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து  தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நேற்று (ஜூன் 30) மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 58 ரன்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், இன்று (ஜூலை 1) நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், ஸ்மித் 34 ரன்களில் ஜோஷ் டங் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 7  ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். உஸ்மான் கவாஜா 77 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்துள்ளது. கேமரூன் கிரீன் 15 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

ஆஸ்திரேலியா இங்கிலாந்தைக் காட்டிலும் 313 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணமில்லை’: சைந்தவி

சைகை மொழியில் டி20 வர்ணனை: டிஸ்னி ஸ்டார் அறிவிப்பு!

சிதறடிக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்!

கலிஃபோர்னியாவில் பவித்ரா லட்சுமி!

ஸ்குவிட் கேம் - 2 எப்போது?

SCROLL FOR NEXT