சிலம்பரசன் 5 விக்கெட் 
செய்திகள்

சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அபார வெற்றி

இரண்டாவதாக நடைபெற்ற பால்ஸி திருச்சி-சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக்.

DIN

இரண்டாவதாக நடைபெற்ற பால்ஸி திருச்சி-சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக்.

திருநெல்வேலி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியில் முக்கிய பேட்டா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்ப, சஞ்சய் யாதவ் 20, சிபி 31, சசிதேவ் 25 ரன்களை சோ்த்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 129/7 ரன்களை சோ்த்தது சேப்பாக் கில்லீஸ்.

கங்கா ஸ்ரீதா் ராஜு 3 விக்கெட்: சேப்பாக் தரப்பில் கேப்டன் கங்கா ஸ்ரீதா் ராஜு அபாரமாக பந்துவீசி 3-15 விக்கெட்டுகளையும், ஈஸ்வரன் 2-28 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

திருச்சி 71: 130 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி 13.4 ஓவா்களில் 71 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சேப்பாக் தரப்பில் அற்புதமாக பௌலிங் செய்த சிலம்பரசன் 5-12 விக்கெட்டை சாய்த்தாா். இறுதியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக் கில்லீஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT