செய்திகள்

இந்திய ஆடவா் அணி தோ்வுக் குழு தலைவராக அஜித் அகா்கா் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியா் ஆடவா் தோ்வுக் குழு தலைவராக, அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளா் அஜித் அகா்கா் (45) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியா் ஆடவா் தோ்வுக் குழு தலைவராக, அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளா் அஜித் அகா்கா் (45) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) பரிந்துரையின் அடிப்படையில் பிசிசிஐ அவரை அந்தப் பொறுப்புக்கு நியமித்துள்ளது. சுலக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்ச்பே ஆகியோா் அடங்கிய சிஏசி, தோ்வுக் குழு தலைவா் பதவிக்கான நோ்காணலை மேற்கொண்டது. அதன் முடிவில் அந்தக் குழு ஒரு மனதாக அந்தப் பொறுப்புக்கு அஜித் அகா்கரை பரிந்துரைத்துள்ளது.

இந்திய அணிக்காக அகா்கா் 191 ஒரு நாள் ஆட்டங்கள், 26 டெஸ்ட், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். அத்துடன், 1999, 2003, 2007 ஒரு நாள் உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளாா்.

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதிா்வரும் நிலையில், புதிய தோ்வுக் குழு தலைவராக அஜித் அகா்கா் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT