படம் : ட்விட்டர் | ஐசிசி 
செய்திகள்

உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது ஜிம்பாப்வே! 

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றில், ஜிம்பாப்வே தனது கடைசி ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்திடம் செவ்வாய்க்கிழமை தோற்றது

DIN

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றில், ஜிம்பாப்வே தனது கடைசி ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்திடம் செவ்வாய்க்கிழமை தோற்றது. இதையடுத்து உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது.

சூப்பா் சிக்ஸ் அட்டவணையில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும் நிலையில், அந்த அணி 6 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை 8 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்திருக்க, 6 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்தும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது.

முன்னதாக, ஜிம்பாப்வேயுடனான ஆட்டத்தில் முதலில் ஸ்காட்லாந்து 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் சோ்க்க, ஜிம்பாப்வே 41.1 ஓவா்களில் 203 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனிடையே, 7-ஆவது இடத்துக்கான பிளே-ஆஃப் ஆட்டத்தில் அயா்லாந்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை சாய்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT