செய்திகள்

முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழப்பு; 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் அசத்தல்!

DIN

ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 19 ரன்களுடனும், பேர்ஸ்டோ 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 7) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சற்று நேரத்திலேயே ஜோ ரூட் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பேர்ஸ்டோவுடன் ஜோடி  சேர்ந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். பேர்ஸ்டோ 12 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மொயின் அலி 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கு 7  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் மார்க் வுட் அதிரடியாக விளையாடினர். இருப்பினும், மார்க் வுட் 8 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 108 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5  சிக்ஸர்கள் அடங்கும். 

இறுதியில், இங்கிலாந்து 237 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டுகள், மிட்செல் மார்ஸ் மற்றும் முர்பி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

இங்கிலாந்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 26 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT