முகப்பு
செய்திகள்

முதல் டி20: வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:01 PM
Photo : Courtesy BCCI Women Twitter
பகிர்:

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - வங்கதேச மகளிர் அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கின்றன. இதில் முதல் டி20 ஆட்டம் மிர்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியால் நிலைத்து ஆடமுடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஷோர்னா அக்டர் 28, சோபனா மோஸ்டரி 23, ஷாதி ராணி 22 ரன்கள் எடுத்தனர். பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஸ்மிருதி மந்தனா 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் அரைசதம் எடுத்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.

ஹர்மன்ப்ரீத் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →