செய்திகள்

4வது ஆஷஸ்: இங்கிலாந்து அணி அறிவிப்பு! 

4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸி. அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு நடைபெறும் ப்ரத்யேகமான டெஸ்ட் போட்டி ஆஷஸ் என அழைக்கப்படுகிறது. 2-1 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது. 

கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டெழுந்துள்ளது. அணியில் 3 மாற்றங்களை செய்ததன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 

4வது ஆஷஸ் ஜூலை 19இல் தொடங்கவுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்ட்டுக்கான 14 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. 3வது போட்டியில் இருந்த அதே அணியை அறிவித்துள்ளது. இதனால் விளையாடும் லெவனில் பெரிதாக மாற்றங்கள் இருக்காதென கணிக்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பெயர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் க்ராவ்ளி, பென் டக்கட், டான் லாரன்ஸ், ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட். 

ஆஸி. இன்னும் 4வது போட்டிகான அணியை அறிவிக்கவில்லை. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இடம் பெறுவார்களா என கிரிகெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT