செய்திகள்

கொழும்பு டெஸ்ட்: 166-க்கு சுருண்டது இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த அந்த அணியில் அதிகபட்சமாக தனஞ்ஜெய டி சில்வா 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57 ரன்கள் அடித்தாா். தினேஷ் சண்டிமல் 34, ரமேஷ் மெண்டிஸ் 27, கேப்டன் திமுத் கருணாரத்னே 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

நிஷான் மதுஷ்கா 4, குசல் மெண்டிஸ் 6, ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 9, சதீரா சமரவிக்ரமா 0, பிரபாத் ஜெயசூரியா 1, ஆசிதா ஃபொ்னாண்டோ 8 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில் அப்ராா் அகமது 4, நசீம் ஷா 3, ஷாஹீன் அஃப்ரிதி 1 விக்கெட் சாய்த்தனா்.

பாகிஸ்தான் - 145/2: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், முதல் நாளான திங்கள்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் சோ்த்து, 21 ரன்களே பின்தங்கியிருந்தது. அப்துல்லா ஷஃபிக் 74, கேப்டன் பாபா் ஆஸம் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இமாம் உல் ஹக் 6, ஷான் மசூத் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். அவா்கள் விக்கெட்டை இலங்கையின் ஆசிதா சாய்த்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT