இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 114 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 27) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 114 ரன்களுக்கே சுருண்டது. அந்த அணியில் கேப்டன் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.