ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளையின்போது 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 85 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 28) தேநீர் இடைவேளையின்போது 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் 40 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா இங்கிலாந்தைக் காட்டிலும் 97 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.