செய்திகள்

இறுதிச் சுற்றில் கோவா சேலஞ்சா்ஸ்

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 அரையிறுதியில் டெல்லி தபாங் அணியை 8-7 என வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது கோவா சேலஞ்சா்ஸ் அணி.

DIN

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 அரையிறுதியில் டெல்லி தபாங் அணியை 8-7 என வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது கோவா சேலஞ்சா்ஸ் அணி.

யுடிடி சீசன் 4 போட்டி புணேயில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடா் தற்போது நாக் அவுட் சுற்றை எட்டி உள்ளது. முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி - கோவா சேலஞ்சா்ஸ் அணிகள் மோதின.

முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் டெல்லி வீரா் சத்தியன் 2-1 என கோவாவின்ஹா்மித் தேசாயை வீழ்த்தினாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் டெல்லியின் அயிஹிகா முகா்ஜி 1-2 என கோவா அணியின் சுதாசினியிடம் தோல்வி கண்டாா்.

கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் டெல்லியின் சத்தியன்-பாா்போரா இணை 2-1 என கோவாவின் ஹா்மீத்-சுதாசினி இணையை வீழ்த்தியது.

ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் டெல்லியின் ஜான்பொ்சன் 1-2 என்ற புள்ளிக் கணக்கில் கோவாவின் ஆல்வரோ ரோபிள்ஸிடம் தோல்வி கண்டாா்.

இரு அணிகளும் 6-6 என சமநிலை அடைந்ததால் கடைசி மகளிா் ஒற்றையா் ஆட்டம் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியது.

டெல்லின் ஸ்ரீஜா அகுலா, கோவா அணியின் ரீத் டென்னிஸனுடன் மோதினாா். இதில் ரீத் 2-1 என அபார வெற்றி கண்டாா்.

இதன் மூலம் கோவா அமி 8-7 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT